News October 7, 2025
சிம்புவுக்கு அரசி ஆகிறாரா சமந்தா?

வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இப்பட டைட்டில் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியான நிலையில், அதில் சிம்பு வைத்திருக்கும் அரிவாள், ‘வட சென்னை’ படத்தில் ராஜனை (அமீர்) கொலை செய்ய பயன்படுத்தியது என்று நெட்டிசன்கள் decode செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்பு – சமந்தா ஜோடி எப்படி இருக்கும்?
Similar News
News October 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 8, 2025
மோடி முதல்வரான கதை (1/2)

PM மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(அக்.7) குஜராத்தின் CM பதவியை ஏற்றார். சங்கர்சிங் வகேலா, கேசுபாய் படேல் போன்ற தலைவர்கள் கோலோச்சிய குஜராத்தில் மோடி CM பதவியை பிடித்தது எப்படி? 67 ஆக இருந்த பாஜக MLA-க்கள் பலம், 1995-ல் 121 ஆக உயர, குஜராத் அமைப்பு செயலாளரான மோடி ஆதரித்த, கேசுபாய் படேல் முதல்வரானார். சங்கர்சிங் வகேலாவின் கலகத்தை அடுத்து, 2 தரப்புக்கும் பொதுவான சுரேஷ் மேத்தா CM ஆனார்.
News October 8, 2025
மோடி முதல்வரான கதை (2/2)

1998-ல் சங்கர்சிங் வகேலா கட்சியில் இருந்து விலக, கேசுபாயை CM பதவி மீண்டும் தேடிவந்தது. 98-ல் PM வாஜ்பாய், மோடியை தேசிய அமைப்பு பொது செயலாளராக்கினார். 2001 உள்ளாட்சி தேர்தல் தோல்வி, நிலநடுக்கத்தை எதிர்கொள்வதில் சுணக்கம் கேசுபாய்க்கு எதிராக திரும்பின. தேர்தலுக்கு 1 வருடம் இருக்கும் போது, 2001 அக்.7-ல் குஜராத்தின் CM ஆன மோடி, 2014-ல் PM பொறுப்பை ஏற்கும் வரை, 11 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்தார்.