News October 7, 2025
கதை சொல்லும் ₹2 காயின்

நமது ₹2 நாணயங்களில் என்ன கதை இருக்கிறது தெரியுமா? முத்திரை, சின்னம் என ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒரு கதை இருக்கு. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். இந்த கதையை, உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. இதுபோன்று, வேறு ஏதேனும் கதை வேண்டுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 8, 2025
மோடி முதல்வரான கதை (2/2)

1998-ல் சங்கர்சிங் வகேலா கட்சியில் இருந்து விலக, கேசுபாயை CM பதவி மீண்டும் தேடிவந்தது. 98-ல் PM வாஜ்பாய், மோடியை தேசிய அமைப்பு பொது செயலாளராக்கினார். 2001 உள்ளாட்சி தேர்தல் தோல்வி, நிலநடுக்கத்தை எதிர்கொள்வதில் சுணக்கம் கேசுபாய்க்கு எதிராக திரும்பின. தேர்தலுக்கு 1 வருடம் இருக்கும் போது, 2001 அக்.7-ல் குஜராத்தின் CM ஆன மோடி, 2014-ல் PM பொறுப்பை ஏற்கும் வரை, 11 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்தார்.
News October 8, 2025
நாக்கை நாட்டியமாட வைக்கும் உங்கள் ஊர் உணவு எது?

‘Foodie’ என்ற சொல்லின் உருவாக்கத்திற்கு முன்பே உணவை ரசித்து ருசித்து உண்பதில் நமக்கு நிகர் யாரும் கிடையாது. இதில் இனிப்பு, காரம் என்ற எந்த விதிவிலக்கும் கிடையாது. அந்த வகையில் சில சிறப்பான, தனித்துவமிக்க உணவுகள், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். உதாரணமாக நெல்லை சொதி குழம்பு, கோவை அரிசி பருப்பு சாதம், சென்னை பிரிஞ்சி. உங்கள் ஊரின் தனித்துவமிக்க உணவு எது என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 8, 2025
நோபல் பரிசு: பரிந்துரைப்பது யார்?

உலகளவில் புகழ்பெற்ற நோபல் பரிசுக்கான பரிந்துரையை, பொதுமக்கள் ஒருபோதும் அளிக்க முடியாது. கல்வியாளர்கள், பல்கலை., பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் & ஏற்கெனவே நோபல் பரிசு பெற்றவர்கள் மட்டுமே பெயர்களை பரிந்துரைக்க முடியும். இதை நோபல் அறக்கட்டளை பரிசீலித்து தேர்வு செய்யும். ஒரு குறிப்பிட்ட பிரிவில் விருதைப் பெற தகுதியானவர்கள் இல்லை என்று கருதினால், அந்த ஆண்டுக்கான விருது யாருக்கும் வழங்கப்படாது.