News October 7, 2025

₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது: இதை செய்யாதீங்க

image

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டியது செல்போன் எண். ஆதார், வங்கி பாஸ்புக்குடன் ஒரே எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். அப்போதுதான், பயனாளர்களை அரசால் எளிதில் அடையாளம் காண முடியும். வெவ்வேறு எண் இருந்தால், அரசின் குறுஞ்செய்தி சென்றடைவதிலும் சிக்கல் எழும். நவம்பர் வரை உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

Similar News

News October 8, 2025

நாட்டு மக்களுக்கு நன்றி: PM மோடி

image

PM மோடி, தலைமைக்கு வந்து இன்று 25-வது ஆண்டு தொடங்குகிறது. 2001-ல் இதே நாளில் தான் குஜராத் CM ஆக பதவியேற்றார். இதுபற்றி X-ல் அவர், சக இந்தியர்களின் தொடர் ஆசிகளுக்கு நன்றி. அரசின் தலைமைப் பதவிக்கு வந்து 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என்ற அவர், நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலேயே இத்தனை ஆண்டுகள் பாடுபட்டு வருவதாக தெரிவித்து சில PHOTOS-ம் பதிவிட்டுள்ளார்.

News October 8, 2025

அன்பே.. ஆருயிரே.. அனுபமா CLICKS..!

image

பிரேமம் திரைப்படம் மூலம் பலரது மனதை கொள்ளை கொண்ட அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு, தமிழ், மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரது க்யூட் எக்ஸ்பிரஷனுக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெகுநாள்கள் கழித்து, அனுபமாவை ‘பைசன்’ திரைப்படத்தில் காணலாம். தற்போது, அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிடிச்சிருந்தா லைக் போடுங்க.

News October 7, 2025

பாகிஸ்தானில் ரயில்வே டிராக்கில் குண்டுவெடிப்பு

image

பாக்.,கின் சிந்த் மாகாணத்திலுள்ள ஷிகார்பூர் மாவட்டத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்ற ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 4 பெட்டிகள் தடம்புரண்டன. 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையிலுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது. இது பற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச்சில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் ஒரு ரயிலை கடத்திய சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!