News October 7, 2025
கன்னட பிக்பாஸுக்கு சிக்கல்

கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் செட் அமைந்துள்ள இடத்தை மூட கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Vels ஸ்டூடியோ மற்றும் Entertainment பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற தவறியதாக KSPCB அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 7, 2025
2-வது ரன்னுக்காக 6 ஆண்டுகள் காத்திருந்த துயரம்

உங்களுக்கு SL முன்னாள் கேப்டன் மார்வன் அட்டப்பட்டு தெரியுமா? அவர் அறிமுக டெஸ்டில் 2 இன்னிங்ஸிலும் டக் அவுட். 21 மாதங்களுக்கு பிறகு 2-வது வாய்ப்பிலும் சொதப்பல் (0,1). 17 மாதங்கள் காத்திருந்தவருக்கு 3-வது முறையும் ஏமாற்றம் (0,0). யாராக இருந்தாலும் உடைஞ்சு போயிருப்பாங்க. 3 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்தவர், டோட்டலா 16 சதங்கள் (6 இரட்டைசதம்) விளாசினார். நம்பிக்கையை மட்டும் இழந்துடாதீங்க!
News October 7, 2025
நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

முன்னோடியான கண்டுபிடிப்புகள், சமூகத்தில் முக்கியமான தாக்கம், அல்லது மனிதநேயம் சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நோபல் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வென்ற இந்தியாவை சேர்ந்த, இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் யார் என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த வருடம் நோபல் பரிசு நமக்கு கிடைக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க?
News October 7, 2025
BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் தெரிவித்திருந்தார். இந்தாண்டில் 8 பேர் டெங்குவால் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.