News October 7, 2025
விஜய்க்கு நேரில் செல்ல பயம்: துரைமுருகன்

கரூர் துயர் நடந்து 10 நாள்களுக்கு மேலான நிலையில், இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய துரைமுருகன், குற்றம் புரியவில்லையென்றால், தைரியமாக நேரில் சென்றிருக்கலாம், தன் நெஞ்சே தன்னை சுடுவதால் விஜய்க்கு வெளியில் வர பயம் என்று காட்டமாக விமர்சித்தார்.
Similar News
News October 7, 2025
BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் தெரிவித்திருந்தார். இந்தாண்டில் 8 பேர் டெங்குவால் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News October 7, 2025
டெல்லி CM-ன் பேச்சு வெட்கக்கேடானது: கனிமொழி

அறிவு சுடரை ஏற்றி, மதத்தை பரப்பி, சமூக நலனுக்காக பிராமண சமூகம் பாடுபடுகிறது என்று டெல்லி CM ரேகா குப்தா கூறியிருந்தார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM சாதியை தூக்கி பிடிப்பது வெட்கக்கேடானது என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இந்த சாதிய அடக்குமுறையை ஒழிக்கவே பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடியதாக தெரிவித்த அவர், மக்களிடையே பிரிவை உருவாக்குவது பாஜக தான் என சாடினார்.
News October 7, 2025
இன்ஸ்டாவில் இனி லொகேஷன் ஷேர் பண்ணலாம்

Snapchat-ஐ போல இனி இன்ஸ்டாவிலும் லொகேஷனை நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம். குறிப்பிட்ட friends Group-ல் லொகேஷனை ஷேர் செய்வது மட்டுமின்றி, தேவையில்லாத நேரத்தில் ஆஃப் செய்தும் கொள்ளலாம். இந்த Instagram map அப்டேட் ஆகஸ்ட் மாதத்திலேயே USA, கனடாவில் வந்துவிட்டது. இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. Andriod, iOS என அனைத்திலும் இந்த அப்டேட்டை இன்ஸ்டா பயனர்கள் யூஸ் பண்ணலாம்.