News October 7, 2025
கடல் உணவு பிரியர்களே.. இது உங்களுக்கு

இந்தியாவின் பல பகுதிகளில், ஜூன் முதல் செப்டம்பர் வரை மீன் சாப்பிட ஏற்ற காலம் கிடையாது. அப்போது. மீன் இனப்பெருக்க காலம் மற்றும் மழைக்காலங்களில் நீர் மாசுபடுவதால் மீன்கள் மூலம் தொற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அக்டோபர் மாதம் மீன்கள் சாப்பிட சிறந்த மாதமாக கருதப்படுகிறது. அக்டோபரில் என்னென்ன மீன்கள் சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க.
Similar News
News October 7, 2025
BREAKING: நயன்தாரா வீட்டில் பரபரப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோப்பநாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனை நடத்தப்படுகிறது. சமீபத்தில், கவர்னர் ரவி, CM ஸ்டாலின், விஜய், த்ரிஷா, ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனையின் முடிவில் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
News October 7, 2025
பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்தது

பிக்பாஸ் தொடங்கிவிட்டது, இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. முதல் நாளில் கெமி உடன் சண்டையிட்ட அவர், தற்போது ரம்யா ஜோவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அனைத்து விஷயங்களிலும் திவாகர் மூக்கை நுழைப்பதாக ரம்யா கூற, ‘ஏய் செல்றத கேளுமா’ என அவர் சத்தம்போடுகிறார். ‘கத்துற வேலையெல்லாம் வச்சிக்கக் கூடாது’ என ரம்யாவும் பதிலடி கொடுத்துள்ளார்.
News October 7, 2025
போனில் ’Accept All Cookies’ அழுத்துறீங்களா? ஆபத்து!

Websites-களை ஓபன் செய்யும்போது, பலவற்றில் Cookies என pop up-ல் காட்டும். அதை எண்டர் செய்தால் மட்டுமே உள்நுழைய முடியும் என்பதால், என்னவென்று படிக்காமலேயே பலர் Accept All-ஐ அழுத்தி விடுவர். இவ்வாறு செய்வதால், இணையத்தில் உங்கள் செயல்பாட்டை 3வது நபரால் கண்காணிக்க முடியும். இதனால் உங்கள் பிரைவசி பாதிக்கப்படுவதை தடுக்க, Cookie-யை பற்றி <<17936723>>தெரிந்து கொண்டு<<>> அனுமதி வழங்கலாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.