News October 7, 2025

நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

image

வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நெல்லையில் அதிகரித்து வருகிறது. வாடகைக்கு பெற்ற நபர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார். வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புணர்விடன் செயல்பட அறிவுறுத்தல் *ஷேர் செய்யுங்கள்

Similar News

News October 7, 2025

நெல்லையில் நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய சம்பவம்

image

சேரன்மகாதேவி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சாட்சி, நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக கோபத்தில் கொதித்து, அவரை நோக்கி செருப்பை வீசினார். மேலும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் ரகளை செய்தார். இதை அறிந்து அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

News October 7, 2025

பிரேக்கிங்: கவின் கொலை வழக்கு; ஜாமீன் கோரி எஸ்ஐ மீண்டும் மனு

image

கவின் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை சரவணன் (எஸ்.ஐ.) மற்றும் சுர்ஜித் நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல். கடந்த மாதம் தாக்கல் செய்யபட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மனு சமர்ப்பித்துள்ளார். விரைவில் இந்த மனுக்குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

News October 7, 2025

BREAKING: நெல்லையில் பந்த்; டவுன் சாலை வெறிச்சோடியது

image

நெல்லை மாநகரில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று நெல்லை மாநகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டவுன் பகுதியில் கடையடைப்பு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

error: Content is protected !!