News October 7, 2025

இதற்காக தான் நோபல் பரிசு

image

குவாண்டம் தடை ஊடுருவல் செயல்பாட்டை பேரளவில் கண்காணிக்கும் சோதனை முறையை கண்டறிந்ததற்கே இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அணுத் துகள் (எ-க: எலக்ட்ரான்) போதுமான ஆற்றல் இல்லாவிட்டாலும், ஒரு ஆற்றல் தடையை ஊடுருவி செல்லும் இயற்பியல் நிகழ்வே குவாண்டம் தடை ஊடுருவல் ஆகும். இதுவரை நுண்ணிய அளவில் மட்டுமே சோதிக்கப்பட்ட நிலையில், புதிய முறையால் இச்சோதனையை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும்.

Similar News

News October 7, 2025

MI ஜெர்ஸியில் தோனி PHOTO

image

தமிழகத்தின் தங்க மகன், சென்னையின் செல்லப் பிள்ளையாக உள்ளவர் MS தோனி. CSK அணிக்காக விளையாடி வரும் இவர், MI லோகோவுடன் கூடிய ஆடையில், கால்பந்து அணியினருடன் உள்ள போட்டோ வைரலாகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ‘2026-ல் தோனி MI-க்காக விளையாடவுள்ளாரா?’ என்றும், ‘மைதானத்திற்கு வெளியிலாவது தோனி, MI ஜெர்ஸியை போட்டாரே’ என்றும் கூறி வருகின்றனர். MI ஜெர்ஸியில் தோனி எப்படி இருக்காருனு கமெண்ட் பண்ணுங்க.

News October 7, 2025

புடினுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

image

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, புடினை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மோடி, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தும் என PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தியாவிற்கு வரும் புடினை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் மோடி கூறியுள்ளார்.

News October 7, 2025

தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

image

தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்க TN அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.20 திங்களன்று தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். தற்போது, அக்.21 அன்று விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே அக்.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாம். SHARE IT.

error: Content is protected !!