News October 7, 2025
மேனேஜர் போன் பண்ணி தொல்லை கொடுக்கிறாரா?

எக்ஸ்ட்ரா நேரம் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும், ஆபிஸில் இருந்து உங்களுக்கு போன் வருவதுண்டா? இந்த தொல்லைக்கு முடிவு கட்ட, ‘Right to disconnect’ உரிமை கோரும் ஒரு தீர்மானத்தை கேரள MLA ஜெயராஜ், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். வீட்டிற்கு சென்றபின், ஊழியர்களுக்கு போன், இமெயில், மெசேஜ், மீட்டிங் என எந்த ஒரு தொல்லையும் தரக்கூடாது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி உங்க கருத்து?
Similar News
News October 7, 2025
குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்கிறதா?

EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.10, 11-ல் நடைபெறவுள்ள EPFO மத்திய அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் தொகை உயரவுள்ளது. 2014-ல் ₹1,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ₹1 கூட உயர்த்தப்படவில்லை.
News October 7, 2025
BREAKING: கரூர் செல்கிறார் விஜய்

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ காலில் பேசிய நிலையில், விஜய் நேரில் செல்வாரா இல்லையா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், கரூர் செல்ல ஏற்பாடுகளை செய்துவரும் விஜய், பாதுகாப்பு கோரி அம்மாவட்ட போலீஸுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு உரிய பதில் கிடைக்காததால் கலெக்டரிடம் மனு அளிக்க தவெக தரப்பு திட்டமிட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விஜய் கரூர் செல்லவுள்ளார்.
News October 7, 2025
முடி வளர்ச்சிக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்?

முடிஉதிர்வு அதிகமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது என சொல்லப்படுகிறது. விளக்கெண்ணெயில் இருக்கும் அமிலம், முடி அடர்த்தியாக வளர, பொடுகு தொல்லை நீங்க, Scalp வரண்டு போகாமல் இருக்க உதவுகிறதாம். இதனால் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து அதை சூடுபடுத்துங்கள். பிறகு அதனை தலையில் தடவி மசாஜ் செய்து குளிங்க. இப்படி செய்வதால் முடி நல்லா வளருமாம். SHARE.