News April 15, 2024

விளக்கம் கேட்கலாம், ஆனால் வழக்கு தொடர முடியாது

image

தேர்தல் விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்தை வெளியிட திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், எங்களிடம் விளக்கம் கேட்கலாம், ஆனால், நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்துள்ளது.

Similar News

News November 7, 2025

ஹாஸ்பிடலில் நடிகர் அருள்நிதி.. நேரில் சென்ற CM ஸ்டாலின்

image

ஷூட்டிங்கின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடிகர் அருள்நிதி சென்னை போரூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையறிந்து ஹாஸ்பிடல் சென்ற CM ஸ்டாலின், தனது தம்பி மகனான அருள்நிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அறுவை சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

News November 7, 2025

இந்தியாவின் டாப் 5 பணக்கார குடும்பங்கள்!

image

இந்தியாவின் மிகவும் பணக்காரக் குடும்பங்கள் யார் தெரியுமா? அவர்கள் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். நீண்ட கால தொழிலில், அவர்களது தொடர்முயற்சியும், புத்திசாலித்தனமும் அவர்களை இன்று செல்வந்தர்களாக உயர்த்தியுள்ளது. அவர்கள் யார் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் செல்வந்தர்களாக விரும்புகிறீர்களா?

News November 7, 2025

31 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி!

image

ஜெர்மனியின் வடக்கு பகுதியில், 31 கோடி ஆண்டுகள் பழமையான சிலந்தி படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Arthrolycosa wolterbeeki என பெயரிடப்பட்ட இந்த சிலந்தியின் படிமத்தில், அதன் கால்களில் உள்ள நுண்ணிய முடிகள் கூட சிதையாமல் உள்ளன. டைனோசர்கள் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிலந்தி வாழ்ந்ததாக கூறும் நிபுணர்கள், இதன் மூலம் அப்போதைய உயிரின வளர்ச்சியை அறியலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

error: Content is protected !!