News October 7, 2025

11,12 வகுப்பு மாணவிகளுக்கு Scholarship; அப்ளை பண்ணுங்க!

image

CBSE 10-ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் Single Child-ஆக இருக்கும் மாணவிகளுக்கு 11, 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதத்திற்கு ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் அக்.23-ம் தேதிக்குள் <>cbse.gov.in<<>> – ல் அப்ளை பண்ணுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News October 7, 2025

முடி வளர்ச்சிக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்?

image

முடிஉதிர்வு அதிகமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது என சொல்லப்படுகிறது. விளக்கெண்ணெயில் இருக்கும் அமிலம், முடி அடர்த்தியாக வளர, பொடுகு தொல்லை நீங்க, Scalp வரண்டு போகாமல் இருக்க உதவுகிறதாம். இதனால் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து அதை சூடுபடுத்துங்கள். பிறகு அதனை தலையில் தடவி மசாஜ் செய்து குளிங்க. இப்படி செய்வதால் முடி நல்லா வளருமாம். SHARE.

News October 7, 2025

நோயாளிகள் இனி ‘மருத்துவ பயனாளிகள்’

image

நோயாளிகள் இனி ‘மருத்துவ பயனாளிகள்’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களை இனி நோயாளிகள் என அழைக்கக்கூடாது. இதற்கு ஏற்றார்போல் மருந்துச் சீட்டுகளில் ‘நோயாளியின் பெயர்’ என்ற இடத்தில் மருத்துவ பயனாளிகள் என்று மாற்ற வேண்டும். அரசின் இந்த பெயர் மாற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன?

News October 7, 2025

குறையும் இல்லை, இனி ஓய்வும் இல்லை: ராமதாஸ்

image

உடல்நலக் குறைவால் கடந்த 3 நாள்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சையில் இருந்தார் ராமதாஸ். CM ஸ்டாலின், DCM உதயநிதி ஸ்டாலின், EPS, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தனக்கு குறையேதும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளதாகவும், இனி ஓய்வும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!