News October 7, 2025
கரூர் துயரம்: CBI விசாரணை கோரும் மனுவை ஏற்றது SC

கரூர் நெரிசல் மரணங்கள் பற்றி சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் பரப்புரையின் போது முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த உமா, SC-யில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட SC, வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
Similar News
News October 7, 2025
₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது: இதை செய்யாதீங்க

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டியது செல்போன் எண். ஆதார், வங்கி பாஸ்புக்குடன் ஒரே எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். அப்போதுதான், பயனாளர்களை அரசால் எளிதில் அடையாளம் காண முடியும். வெவ்வேறு எண் இருந்தால், அரசின் குறுஞ்செய்தி சென்றடைவதிலும் சிக்கல் எழும். நவம்பர் வரை உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
News October 7, 2025
கரூர் சம்பவத்தை தினமும் பேசாதீங்க: கமல்ஹாசன்

கரூர் உயிரிழப்பு என்பது சோகம் தான், ஆனால் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோவில் சிகிச்சையில் உள்ள ராமதாஸ், வைகோ ஆகியோரிடம் உடல்நலம் விசாரித்த கமல், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூர் சம்பவம் பற்றி தினமும் பேச வேண்டாம் என்ற அவர், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.
News October 7, 2025
கன்னட பிக்பாஸுக்கு சிக்கல்

கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் செட் அமைந்துள்ள இடத்தை மூட கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Vels ஸ்டூடியோ மற்றும் Entertainment பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற தவறியதாக KSPCB அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.