News October 7, 2025

சிவகாசியில் இரவில் பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் மற்றும் போலீசார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது புலிப்பாறைப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் அனுமதி அளிக்காத இடத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து இரவு நேரத்தில் புஸ்வானம் பட்டாசை உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பட்டாசு ஆலை நிர்வாகி பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News

News December 7, 2025

விருதுநகர்: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய காதல் கணவர்

image

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து விக்னேஸ்வரன் (22). பட்டாசு தொழிலாளியான இவர் 4 மாதத்திற்கு முன் பாக்கியலட்சுமியை காதல் திருமணம் செய்துள்ளார். முத்து விக்னேஸ்வரன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பாக்கியலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் முத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

News December 7, 2025

விருதுநகர்: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க.

News December 7, 2025

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை கடித்து குதறிய நாய்கள்

image

காரியாபட்டியில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் மாலை வீடு திரும்ப மந்திரி ஓடை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தனர். அப்போது, அங்கு சுற்றி திரிந்த நாய்கள் 4 மாணவிகள், பெரியவர் ஒருவரை கடித்தது. அதே போல் ஆவியூர், டி.வேப்பங்குளம், வக்கணாங்குண்டு கிராமங்களில் 5க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். நாய்களை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை வைகின்றனர்.

error: Content is protected !!