News October 7, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பட்டாசு கடைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் சில்லறை விற்பனை கடைகள் தனி கட்டிடத்தில் இயங்க வேண்டும்,பட்டாசு கடைக்கு அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய ஓட்டல் எண்ணெய் கடை இருக்கக்கூடாது, எலக்ட்ரிக்கல் டிரான்ஸ்பார்மர் அருகிலோ,மாடிப்படி அடியிலோ கடை இருக்கக்கூடாது, தீயணைப்பான் உரிய முறையில் புதுப்பித்திருக்க வேண்டும் என பட்டாசு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்
Similar News
News October 8, 2025
மயிலாடுதுறையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று(அக்.7) இரவு 10 மணி முதல் நாளை(அக்.8) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 7, 2025
சாகும்வரை உண்ணாவிரதம்; தருமபுரம் ஆதீனம் அறிவிப்பு

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 25வது சன்னிதானத்தின் காலத்தில் கட்டப்பட்ட இலவச மகப்பேறு மருத்துவமனை இடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 27வது சன்னிதானம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், அங்கு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளதாக கூறப்படுவதால் தருமபுரம் ஆதீனம் பணிகளை தடுத்துநிறுத்த கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.
News October 7, 2025
மயிலாடுதுறை: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <