News October 7, 2025

தமிழகத்தில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்: மா.சுப்பிரமணியன்

image

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். TN முழுவதும் 10000 டெங்கு ஒழிப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், கொசு உற்பத்தியை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் 15,796 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 8 பேர் பலியானதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 7, 2025

கடல் உணவு பிரியர்களே.. இது உங்களுக்கு

image

இந்தியாவின் பல பகுதிகளில், ஜூன் முதல் செப்டம்பர் வரை மீன் சாப்பிட ஏற்ற காலம் கிடையாது. அப்போது. மீன் இனப்பெருக்க காலம் மற்றும் மழைக்காலங்களில் நீர் மாசுபடுவதால் மீன்கள் மூலம் தொற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அக்டோபர் மாதம் மீன்கள் சாப்பிட சிறந்த மாதமாக கருதப்படுகிறது. அக்டோபரில் என்னென்ன மீன்கள் சாப்பிடலாம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க.

News October 7, 2025

மறந்தும் இந்த 3 பொருள்களை தானம் கொடுத்துராதீங்க!

image

தானம் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால், இந்த 3 பொருள்களை தானமாக கொடுத்துவிட கூடாது என எச்சரிக்கப்படுகிறது ➤கத்தி, கடப்பாரை போன்ற கூர்மையான பொருள்களை தானமாக கொடுத்தால், கெட்ட பலன்கள் வீடுதேடி வருமாம் ➤பழைய உணவுகளை பிறருக்கு தானமாக கொடுப்பது, வரவுக்கு மீறி செலவுகளை உண்டாகுமாம் ➤துடைப்பத்தை தானமாக கொடுப்பது வீட்டில் பணப் பிரச்னையை உண்டாக்குமாம். கவனமா இருங்க. அனைவருக்கும் இத்தகவலை பகிருங்கள்.

News October 7, 2025

இதற்காக தான் நோபல் பரிசு

image

குவாண்டம் தடை ஊடுருவல் செயல்பாட்டை பேரளவில் கண்காணிக்கும் சோதனை முறையை கண்டறிந்ததற்கே இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அணுத் துகள் (எ-க: எலக்ட்ரான்) போதுமான ஆற்றல் இல்லாவிட்டாலும், ஒரு ஆற்றல் தடையை ஊடுருவி செல்லும் இயற்பியல் நிகழ்வே குவாண்டம் தடை ஊடுருவல் ஆகும். இதுவரை நுண்ணிய அளவில் மட்டுமே சோதிக்கப்பட்ட நிலையில், புதிய முறையால் இச்சோதனையை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும்.

error: Content is protected !!