News October 7, 2025
30 வயதை கடந்தவரா? இந்த Medical டெஸ்ட்கள் பண்ணுங்க!

உடலுக்கு ஏதாவது பிரச்னை வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்கு, இந்த டெஸ்ட்களை 30 வயதை கடந்த ஆண் & பெண் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் டாக்டர்கள்: ✦CBC ✦Lipid டெஸ்ட் ✦ECG டெஸ்ட் ✦கல்லீரல்- சிறுநீரக செயல்பாடு டெஸ்ட் ✦தைராய்டு ✦வைட்டமின் D டெஸ்ட். ஒன்று அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த டெஸ்ட்களை செய்து கொண்டு உடல்நலம் குறித்து அறிவது அவசியம். SHARE IT.
Similar News
News October 7, 2025
இதற்காக தான் நோபல் பரிசு

குவாண்டம் தடை ஊடுருவல் செயல்பாட்டை பேரளவில் கண்காணிக்கும் சோதனை முறையை கண்டறிந்ததற்கே இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அணுத் துகள் (எ-க: எலக்ட்ரான்) போதுமான ஆற்றல் இல்லாவிட்டாலும், ஒரு ஆற்றல் தடையை ஊடுருவி செல்லும் இயற்பியல் நிகழ்வே குவாண்டம் தடை ஊடுருவல் ஆகும். இதுவரை நுண்ணிய அளவில் மட்டுமே சோதிக்கப்பட்ட நிலையில், புதிய முறையால் இச்சோதனையை பெரிய அளவில் மேற்கொள்ள முடியும்.
News October 7, 2025
அஜித்துக்கு ஆனந்த் மஹிந்திரா புகழாரம்

சினிமாவுக்கு தற்காலிக லீவ் விட்டுள்ள அஜித்குமார், ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், ஸ்பெயினில் மஹிந்திராவின் ‘FORMULA E GEN 2’ காரை அஜித் டெஸ்ட் டிரைவ் செய்தார். இதுதொடர்பான போட்டோஸை X தளத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, ‘Spain, Speed, and Style’ என குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் அடுத்த சாகசத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
சற்றுமுன்: விஜய் உருக்கமான பேச்சு

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, ‘என்றும் உங்களுடன் ஒருவனாக இருப்பேன், இது ஈடு செய்ய முடியாத இழப்பு, விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்’ என அவர் ஆறுதல் கூறியுள்ளாராம். இதனால், விரைவில் விஜய் கரூர் செல்வார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீடியோ கால் பேசியதை போட்டோ, வீடியோ எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.