News October 7, 2025

இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸி. டீம் இதுதான்!

image

இந்திய தொடருக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20: மார்ஷ் (C), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், நேதன் எல்லிஸ், ஹேசில்வுட், ஹெட், இங்க்லிஸ், குஹ்னெமன், மிச்செல் ஓவன், ஷார்ட், ஸ்டோய்னிஸ், ஜம்பா. ODI: மார்ஷ் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், ஹெட், சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேர்ரி, கூப்பர் கோனொலி, டார்ஷூயிஸ், எல்லிஸ், கிரீன், இங்க்லிஸ், ஓவன், ரென்ஷா, ஷார்ட், ஜம்பா.

Similar News

News October 7, 2025

பாம்பாக மாறி கொத்தும் மனைவி.. கதறும் கணவர்!

image

பெண், பாம்பாக உருமாறி பழிவாங்குவது போல பல படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் ‘என்னோட பொண்டாட்டி உண்மையாவே பாம்பாக மாறி என்ன கொத்துறா’ என உ.பி.,யில் மிராஜ் என்பவர் புகார் அளித்து ஷாக் கொடுத்துள்ளார். இரவில் தூங்கும் போது, தனது மனைவி நசீமுன் பாம்பாக மாறி, தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சித்ததாகவும் நடுக்கத்துடன் புகார் அளித்துள்ளார். இதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் பலரும் உறைந்துள்ளனர்.

News October 7, 2025

மனசாட்சியுடன் பேசுங்கள்: முத்துசாமி

image

கரூர் துயரில் அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள். திமுக பயப்படவில்லை என்ற அவர், விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

News October 7, 2025

தீபாவளி விடுமுறை.. அரசு HAPPY NEWS

image

தீபாவளி விடுமுறையையொட்டி ஊர்களுக்கு செல்ல 20,378 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கூடுதல் சர்ப்ரைஸாக, 300 தனியார் பஸ்களை அரசே இயக்குமாம். தனியார் பஸ் உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கி.மீ.-க்கு எவ்வளவு கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு, தனியார் பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படவுள்ளன. அதனால், தீபாவளிக்கு அரசு பஸ் டிக்கெட்டில் தனியார் பஸ்ஸில் போகலாம்!

error: Content is protected !!