News April 15, 2024
சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் முடக்கம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் சேட்போட் (WhatsApp chatbot) மூலம் டிக்கெட் பெறும் வசதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தற்காலிகமாக முடங்கியுள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், CMRL பயண அட்டை, மொபைல் செயலி, யுபிஐ செயலிகள், சிங்கார சென்னை கார்டு போன்ற பிற சேவைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 16, 2025
சென்னை: ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News October 16, 2025
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த எம்எல்ஏ-க்கள்

பாமக சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணி (ம) கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தில் உள்ள நிலையில், இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
News October 16, 2025
சென்னை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இன்று காலை முதல் TNSTC பேருந்து முன்பதிவு தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . 9445014436 என்ற எண்ணில் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியலாம்.