News October 7, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹89,600-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ₹75 உயர்ந்து ₹11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ₹90 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News October 7, 2025
கரூர் துயரம்: CBI விசாரணை கோரும் மனுவை ஏற்றது SC

கரூர் நெரிசல் மரணங்கள் பற்றி சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் பரப்புரையின் போது முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த உமா, SC-யில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட SC, வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
News October 7, 2025
விஜய்யை பாஜக கையில் எடுக்க பார்க்கிறது: திருமாவளவன்

பாஜகவை கொள்கை எதிரி என தெரிவித்த விஜய்யுடன், அவர்கள் உறவாட முயல்வது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யை தங்கள் கையில் எடுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தை வேண்டுமென்றே பாஜக திரித்து பேசுவதாகவும், செந்தில் பாலாஜியின் மீது பழிபோட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
News October 7, 2025
Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

பொதுவாக காய்கறிகள், சமைத்த பொருள்களை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம் எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு பயன்படுத்துவோம். ஆனால், சில பொருள்களை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அது என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.