News October 7, 2025
அடுத்தடுத்து அப்டேட்களை வாரி வழங்கும் Whatsapp!

Whatsapp அடுத்தடுத்து பல அப்டேட்களை தர உள்ளது *Custom AI backgrounds: வீடியோ கால்கள், போட்டோக்களுக்கு AI மூலம் பிரத்யேக Background வைப்பது *Motion Photos support: போட்டோவை லைவ் Gif போல, சவுண்டுடன் போட்டோ பகிரலாம் *New Sticker packs: புதிதாக Emoji ஸ்டிக்கர்கள் போன்ற பல அப்டேட்கள் வரிசைக்கட்டியுள்ளன. இது Zoho-வின் Arattai-ன் போட்டியை சமாளிக்க கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என கூறப்படுகிறது.
Similar News
News October 7, 2025
அடடே! டிகிரி முடித்திருந்தாலே மத்திய அரசு வேலை

NLC இந்தியா நிறுவனத்தில் Trade Apprenticeship Training, Graduate Apprenticeship Training பதவிகளுக்கு 1101 பணியிடங்கள் உள்ளன. இதற்கு மாதம் 15,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. B.Sc, B.C.A, B.B.A, B.Com, B.Pharm, B.Sc.(Nursing) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2021 – 2025 ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்.21-க்குள் <
News October 7, 2025
கரூர் துயரம்: CBI விசாரணை கோரும் மனுவை ஏற்றது SC

கரூர் நெரிசல் மரணங்கள் பற்றி சிபிஐ விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் பரப்புரையின் போது முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த உமா, SC-யில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட SC, வரும் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
News October 7, 2025
விஜய்யை பாஜக கையில் எடுக்க பார்க்கிறது: திருமாவளவன்

பாஜகவை கொள்கை எதிரி என தெரிவித்த விஜய்யுடன், அவர்கள் உறவாட முயல்வது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யை தங்கள் கையில் எடுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தை வேண்டுமென்றே பாஜக திரித்து பேசுவதாகவும், செந்தில் பாலாஜியின் மீது பழிபோட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.