News October 7, 2025
சேலம்: 89 ஆம்னி பேருந்து – ரூ.1.59 லட்சம் அபராதம் வசூல்!

ஆயுதப்பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரால் சேலத்தில் 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 502 ஆம்னி பேருந்துகளை சோதனைக்கு உட்படுத்தியதில் 89 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூபாய் 1.59 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Similar News
News November 9, 2025
சேலம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
News November 9, 2025
சேலம்: டிகிரி இருந்தால் போதும்.. வங்கியில் வேலை!

சேலம் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <


