News October 7, 2025

சிறுமி வன்கொடுமை: காமெடி நடிகர் கைது

image

சென்னையில் விடுதி ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சினிமா இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்து போனதால், அவரது தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனிமையில் தவித்த சிறுமியை கவனித்து வந்த, தாயின் தோழி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கிய கட்சியின் நிர்வாகியும் சிக்கியுள்ளார்.

Similar News

News October 7, 2025

விஜய்யை பாஜக கையில் எடுக்க பார்க்கிறது: திருமாவளவன்

image

பாஜகவை கொள்கை எதிரி என தெரிவித்த விஜய்யுடன், அவர்கள் உறவாட முயல்வது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யை தங்கள் கையில் எடுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தை வேண்டுமென்றே பாஜக திரித்து பேசுவதாகவும், செந்தில் பாலாஜியின் மீது பழிபோட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

News October 7, 2025

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த பொருள்களை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம் எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு பயன்படுத்துவோம். ஆனால், சில பொருள்களை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அது என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 7, 2025

மீண்டும் பணியை தொடங்கினார் விஜய்

image

கரூர் துயரத்திற்கு பிறகு அமைதியாக இருந்த விஜய், மீண்டும் அரசியல் பணியை தொடங்கி இருக்கிறார். தற்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக <<17937429>>வீடியோகால் <<>>மூலம் பேசி வரும் விஜய், விரைவில் கரூர் வருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், இன்று ஆனந்த், நிர்மல் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவின் அடிப்படையில், எந்த நேரத்திலும் விஜய் கரூருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

error: Content is protected !!