News October 7, 2025

அக்.22-ல் ஜனாதிபதி சபரிமலையில் தரிசனம்

image

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அக்.22-ம் தேதி தனி விமானத்தில் கொச்சிக்கு வரும் அவர், பம்பை கணபதி கோயிலில் இருமுடி கட்டி நடை பயணமாக சபரிமலை சன்னிதானம் செல்லவுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்று சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Similar News

News October 7, 2025

செல்போன் Radiation அதிகரித்தால்..

image

செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கள் உடல் செல்களை வெப்பமாக்குகின்றன. SAR (Specific Absorption Rate) அறிவுரையின்படி, கதிர்வீச்சு ஒரு கிலோகிராமுக்கு 1.6 வாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. உங்கள் போனிலுள்ள Radiation-ஐ செக் பண்ண, ‘*#07#’ டயல் பண்ணுங்க. கதிர்வீச்சு தோல் நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும், மன அழுத்தம், மன பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம். இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News October 7, 2025

சற்றுமுன்: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

image

அண்ணாமலை பெயரை கூறி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் ₹10 லட்சம் கேட்டு மிரட்டிய பாஜக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 3 பேர் கைதாகினர். இதற்கிடையில் இச்சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணாமலையும் கூறிவிட்டார். இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டதாக கூறி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் சாமிநாதனை நீக்கி, பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

News October 7, 2025

கரூர் மக்களுக்கு வீடியோ கால் செய்த விஜய்

image

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்து 10 நாள்களாகியும் களத்திற்கு செல்லாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் விஜய். இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததே காரணம் என தவெகவினர் கூறினர். இந்நிலையில் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த தனுஷ்குமார் என்பவரது தாய் மற்றும் தங்கைக்கு, விஜய் Video Call-ல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் கரூர் வருவேன் என அவர்களிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!