News April 15, 2024

தூங்கிக் கொண்டிருந்த மகள் மாயம், தாயார் புகார்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகள் திருப்பாவை (16). வழக்கம் போல் இரவில் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது திருப்பாவை மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் திருப்பாவை தாயார் சுதா புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

கரூர் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கரூர் மாவட்டம், சிந்தலவாடி அருகே திம்மாச்சிபுரம் பகுதியில் தங்கையான் (70) என்ற முதியவர், தொடர்ச்சியான வயிற்றுவலி காரணமாக மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகமேம்பாடு ஏற்பட்டுள்ளது. லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 26.12.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவிக்கிறார்.

News December 25, 2025

கரூர்: இதை SAVE பண்ணிக்கோங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

error: Content is protected !!