News April 15, 2024
உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.
Similar News
News January 26, 2026
கள்ளக்குறிச்சியில் கரண்ட் கட்?

திருக்கோவிலூர் கோட்டம் தேவரடியார் குப்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.நாளை (ஜன.27) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மணலூர்பேட்டை, சித்தப்பட்டிணம் செல்லக்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம் போன்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ரகுராமன் அறிவித்துள்ளார்.
News January 26, 2026
கள்ளக்குறிச்சி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (35), நேற்று (ஜன. 25) வேலை முடிந்து வீடு திரும்பும்போது சாத்தனூர் அருகே விபத்தில் சிக்கினார். எதிரே வந்த ராஜேந்திரன் (40) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராதிகா அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஜன.25 இரவு முதல் நாளை (ஜன.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


