News October 7, 2025
மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் யோகாசனம்!

✦பிராணயாமம் வகையை சேர்ந்த அனுலோம விலோமாசனத்தை செய்வதால் மன அழுத்தம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் ✦மேலும், மாரடைப்பு அபாயத்தையும் இது குறைக்கிறது ✦அனுலோம (Anuloma) என்றால் இயற்கையான வழி அல்லது நேர்செலுத்தல். விலோம (Viloma) என்றால் எதிர்செலுத்தல் ✦ஆரம்பத்தில் 1–2 நிமிடங்கள் வரை செய்யலாம் ✦எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கம் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளோம். SHARE IT.
Similar News
News October 7, 2025
நயினார் பரப்புரைக்கு அனுமதி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயணத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில், அக்.12-ம் மதுரையில் தொடங்கும் இந்த பரப்புரையில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.
News October 7, 2025
இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸி. டீம் இதுதான்!

இந்திய தொடருக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20: மார்ஷ் (C), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், நேதன் எல்லிஸ், ஹேசில்வுட், ஹெட், இங்க்லிஸ், குஹ்னெமன், மிச்செல் ஓவன், ஷார்ட், ஸ்டோய்னிஸ், ஜம்பா. ODI: மார்ஷ் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், ஹெட், சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேர்ரி, கூப்பர் கோனொலி, டார்ஷூயிஸ், எல்லிஸ், கிரீன், இங்க்லிஸ், ஓவன், ரென்ஷா, ஷார்ட், ஜம்பா.
News October 7, 2025
BREAKING: இன்று 12 மணிக்கு மேல்.. விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவத்தில் ஆனந்த், நிர்மலின் ஜாமின் மனுக்கள் இன்று 12 மணிக்கு மேல் SC-யில் விசாரணைக்கு வரவுள்ளன. நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜாமின் கிடைத்தால், உடனே கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது பற்றியும், ஜாமின் கிடைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறார்.