News October 7, 2025
சாம்பியன் பவுலர் ஜாஹிர் கானுக்கு பிறந்தநாள்

2011 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜாகிர் கானுக்கு இன்று 47-வது பிறந்தநாள். டெஸ்டில் 311 விக்கெட்களும், ODI-ல் 282 விக்கெட்களும் எடுத்துள்ள அவர், Knuckle ball வீசுவதில் வல்லவர். Zippy Zakky என்று செல்லமாக அழைக்கப்படும் ஜாஹிர் கானின் பவுலிங் ஆக்ஷனை சிறுவயதில் நாம் ஒரு முறையாவது கட்டாயம் முயற்சித்திருப்போம். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை லைக்ஸ் போட்டு தெரிவியுங்கள்..
Similar News
News October 7, 2025
30 வயதை கடந்தவரா? இந்த Medical டெஸ்ட்கள் பண்ணுங்க!

உடலுக்கு ஏதாவது பிரச்னை வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்கு, இந்த டெஸ்ட்களை 30 வயதை கடந்த ஆண் & பெண் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் டாக்டர்கள்: ✦CBC ✦Lipid டெஸ்ட் ✦ECG டெஸ்ட் ✦கல்லீரல்- சிறுநீரக செயல்பாடு டெஸ்ட் ✦தைராய்டு ✦வைட்டமின் D டெஸ்ட். ஒன்று அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த டெஸ்ட்களை செய்து கொண்டு உடல்நலம் குறித்து அறிவது அவசியம். SHARE IT.
News October 7, 2025
நயினார் பரப்புரைக்கு அனுமதி

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயணத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில், அக்.12-ம் மதுரையில் தொடங்கும் இந்த பரப்புரையில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.
News October 7, 2025
இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஆஸி. டீம் இதுதான்!

இந்திய தொடருக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20: மார்ஷ் (C), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், நேதன் எல்லிஸ், ஹேசில்வுட், ஹெட், இங்க்லிஸ், குஹ்னெமன், மிச்செல் ஓவன், ஷார்ட், ஸ்டோய்னிஸ், ஜம்பா. ODI: மார்ஷ் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், ஹெட், சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேர்ரி, கூப்பர் கோனொலி, டார்ஷூயிஸ், எல்லிஸ், கிரீன், இங்க்லிஸ், ஓவன், ரென்ஷா, ஷார்ட், ஜம்பா.