News October 7, 2025
டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த புடின்

டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கினால் அமெரிக்கா-ரஷ்யா உறவு பாதிக்கப்படும் என டிரம்ப்பை, புடின் எச்சரித்துள்ளார். களத்தில் அமெரிக்க படையின் உதவி இல்லாமல் உக்ரைனால் அந்த ஏவுகணைகளை இயக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், அவற்றை அமெரிக்கா வழங்கியிருந்தாலும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு திறம்பட எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார். டோமாஹாக் ஏவுகணை 2,500கிமீ தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும்.
Similar News
News October 7, 2025
ராமதாஸை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்

சென்னை தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நயினார் நாகேந்திரன். அவருடன் பாஜக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் ஜெய் பாண்டா, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். முன்னதாக, CM ஸ்டாலின், சீமான், EPS ஆகியோரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்னும் 2 நாள்களில் ராமதாஸ் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
News October 7, 2025
விஜயகாந்த் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவின் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்தது, தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
News October 7, 2025
ராமதாஸை நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக ராமதாஸின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார். தற்போது ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.