News October 7, 2025
வலுவான கால்கள் பெற 4 பயிற்சிகள்

கால்கள் தொடர்ந்து செயல்படும்போது, உடலுக்கு சிறந்த ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றன. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன. எனவே, கால்களை வலுவாக வைத்துக்கொள்வது, நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். வலுவான கால்களுக்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று, மேலே போட்டோக்கள் உள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கால்கள் வலுவாக இருக்கா?
Similar News
News October 7, 2025
ராமேஸ்வரத்தில் டூம்ஸ்டே மீன்; சுனாமி அபாயம்.?

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் நேற்று, அரிய மீன் இனமான 5 அடி நீளமுள்ள டூம்ஸ்டே மீன் சிக்கியது. ஆழ்கடலில் வாழும் இம்மீன் கடல் மேற்பரப்பில் வந்த சமயத்தில் பாம்பன் மீனவர் வலையில் சிக்கி உள்ளது. ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த மீன்கள் கரை ஒதுங்கினால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என கூறுவதாக, மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
News October 7, 2025
சற்றுநேரத்தில் முன்ஜாமின் மனு விசாரணை

கரூர் துயரச் சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் N.ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரின் மனுக்களும் இன்று 12 மணிக்கு மேல் விசாரணைக்கு வரவுள்ளது. தவெக தரப்பில் பிரபலமான வழக்கறிஞர் வாதாட இருப்பதால், ஜாமின் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தவெகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, இருவரின் முன்ஜாமின் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது.
News October 7, 2025
அரசியல் நோக்கத்தோடு PM செயல்படுகிறார்: மம்தா

மேற்குவங்கத்தில் <<17928599>>பாஜக MP தாக்கப்பட்டது<<>>, திரிணாமுல் காங்., ஆட்சியின் மோசமான நிலையை காட்டுவதாக PM மோடி சாடியிருந்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தை PM அரசியலாக்குவது கவலைக்குரியது என CM மம்தா பானர்ஜி ரிப்ளை கொடுத்துள்ளார். ஆதாரம் இல்லாமல் திரிணாமுல் காங்., மீதும், அதன் ஆட்சி மீதும் குற்றம்சாட்டுவதாக கூறிய அவர், விசாரணை மூலமாகவே யார் மீது தவறு என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.