News October 7, 2025
வங்கியில் ₹93,960 சம்பளத்தில் வேலை.. அப்ளை பண்ணுங்க

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 56 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்த 24-39 வயதுக்குட்பட்டவர்கள் மேனேஜர், சீனியர் மேனேஜர், Forex Acquisition பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ₹93,960 முதல் ₹1,05,280 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
Similar News
News October 7, 2025
சிறுமி வன்கொடுமை: காமெடி நடிகர் கைது

சென்னையில் விடுதி ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சினிமா இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்து போனதால், அவரது தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனிமையில் தவித்த சிறுமியை கவனித்து வந்த, தாயின் தோழி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கிய கட்சியின் நிர்வாகியும் சிக்கியுள்ளார்.
News October 7, 2025
மூலிகை: வசம்பின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, வசம்பை தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்களும் நீங்கும் *விஷம் அருந்தியவர்களுக்கு உடனே வசம்பு தூளை கொடுத்தால், விஷம் முறிந்துவிடும் *வசம்பு பொடியுடன் கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து குடித்தால், சளி, இருமல், வயிறு உப்புசம் ஆகியவை நீங்கும். SHARE IT.
News October 7, 2025
அரசனாகும் சிலம்பரசன்

சிம்புவுடன் வெற்றிமாறன் முதன்முறையாக இணையும் புதிய படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.