News October 7, 2025
மிதாலி ராஜை கெளரவிக்கும் ஆந்திர அரசு

மகளிர் கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனை படைத்த மிதாலி ராஜை ஆந்திர அரசு கெளரவிக்க முடிவெடுத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு ஸ்டாண்டுக்கு மிதாலி ராஜ், உள்ளூர் வீராங்கனை ரவி கல்பனா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன. விசாகப்பட்டினத்தில் IND W Vs AUS W உலக கோப்பை போட்டி நடைபெறும் அக்.12-ம் தேதி அன்று, அவர்களது பெயர்களில் இரு ஸ்டாண்ட்களும் திறக்கப்படவுள்ளன.
Similar News
News October 7, 2025
தமிழக பிரபலம் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் காலமானார். அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி, சவுமியா அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். CM ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரின் இறுதி சடங்குகள் இன்று காலை 9 மணிக்கு மாடம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளன.
News October 7, 2025
தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்

பிகார் தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. இந்நிலையில், அக்.9ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க போவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அதோடு தானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், தனது கட்சி 28% ஓட்டுகளை பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 7, 2025
அக்.22-ல் ஜனாதிபதி சபரிமலையில் தரிசனம்

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அக்.22-ம் தேதி தனி விமானத்தில் கொச்சிக்கு வரும் அவர், பம்பை கணபதி கோயிலில் இருமுடி கட்டி நடை பயணமாக சபரிமலை சன்னிதானம் செல்லவுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்று சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.