News October 7, 2025

‘AK64’ ஷுட்டிங் விரைவில் தொடக்கம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK64 படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Similar News

News October 7, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரைக்கும் 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News October 7, 2025

தைராய்டு பிரச்னை சீக்கிரம் சரியாக இயற்கை வைத்தியம்

image

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தைராய்டு பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதற்கு மருத்துவம் அவசியம் என்றாலும், இயற்கை வைத்தியமும் பலனளிக்கலாம். கடல் பாசியை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு பிரச்சனையை குறைக்க உதவும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இது தவிர தொடர்ச்சியாக மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்வது சாலச்சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 7, 2025

தீபாவளி பரிசு: ₹5,000-ஆக உயர்த்தினார் CM ஸ்டாலின்

image

தீபாவளி போனஸ் அறிவிப்புகளை தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்பணம் (₹20,000), அரசு சி, டி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ₹8,400 முதல் அதிகபட்சம் ₹16,800 வரை போனஸ் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை ₹4,000-லிருந்து ₹5,000-ஆகவும் குடும்ப ஓய்வூதியத்தை ₹2,000-லிருந்து ₹2,500-ஆகவும் உயர்த்தி CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!