News October 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 481 ▶குறள்: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. ▶பொருள்: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

Similar News

News October 7, 2025

இந்த கட்டிடங்களுக்கு இவ்வளவு செலவா?

image

வியப்பை ஏற்படுத்தும் பிரமாண்டமான கட்டிடங்கள் அமைக்க எவ்வளவு செலவு ஆனது தெரியுமா? உங்களுக்காக, உலகில் புகழ்பெற்ற கட்டிடங்கள் அமைக்க எவ்வளவு செலவு ஆனது என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, வேறு ஏதேனும் பிரபலமான கட்டிடங்கள் அதிக செலவில் கட்டப்பட்டுள்ளதா? தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News October 7, 2025

41 உயிர்களை பாதுகாத்திருக்க வேண்டியது CM கடமை: நயினார்

image

கச்சத்தீவு பிரச்னையை எழுப்பி, கரூர் விவகாரத்தை CM ஸ்டாலின் திசை திருப்புவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்க்கு கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்காதது ஏன், 30 ஆம்புலன்ஸ் ஏன் வந்தன, CM உடனடியாக கரூர் வந்தது ஏன் உள்ளிட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 41 உயிர்களை பாதுகாத்திருக்க வேண்டியது முதல்வரின் கடமை எனவும் நயினார் தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் யோகாசனம்!

image

✦பிராணயாமம் வகையை சேர்ந்த அனுலோம விலோமாசனத்தை செய்வதால் மன அழுத்தம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் ✦மேலும், மாரடைப்பு அபாயத்தையும் இது குறைக்கிறது ✦அனுலோம (Anuloma) என்றால் இயற்கையான வழி அல்லது நேர்செலுத்தல். விலோம (Viloma) என்றால் எதிர்செலுத்தல் ✦ஆரம்பத்தில் 1–2 நிமிடங்கள் வரை செய்யலாம் ✦எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கம் மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளோம். SHARE IT.

error: Content is protected !!