News October 7, 2025
TRB தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவையுங்கள்: அன்புமணி

அக்.12-ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் அத்தேர்வை எதிர்கொள்வதற்கு, கூடுதல் அவகாசம் தேவை என தேர்வர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கணினி முறையில் (CBT) தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 7, 2025
6 மாவட்டங்களில் கனமழை பொழியும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களிலும், நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும் கனமழை பொழியும் என்று IMD தெரிவித்துள்ளது. எனவே, வெளியே சென்றால் குடை எடுத்துச் செல்லுங்க..
News October 7, 2025
பிஹாரில் NDA கூட்டணிக்கே வெற்றி: கருத்துக்கணிப்பு

பிஹாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என Matrize கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. NDA கூட்டணி (BJP, JDU) மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 150 – 160 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி (RJD, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்) 70 – 85 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 – 5 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
News October 7, 2025
மயக்கும் மாயக்காரி மிருணாள் தாக்கூர்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்த சிலரில் மிருணாள் தாக்கூரும் ஒருவர். ‘சீதா ராமம்’, ‘ஹாய் நன்னா’, ‘பேமிலி ஸ்டார்’ படங்களில் கவனம் ஈர்த்த மிருணாள் தாக்கூர் இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தமே. இந்நிலையில், தனது புதிய போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பதிவிட, கமெண்ட் செக்ஷனை ரசிகர்கள் தங்களது ஸ்பெஷல் கவிதைகளால் நிரப்பி வருகின்றனர்.