News October 7, 2025
பிஹார் அரியணை யாருக்கு?

பிஹார் தேர்தலை தீர்மானிக்கும் 5 முக்கிய அம்சங்கள்: * CM நிதிஷ் உடல்நிலை பற்றிய எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள் *1.21 கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க NDA வழங்கிய தலா ₹10,000 *வாக்குத் திருட்டுக்கு எதிரான ராகுலின் வாக்காளர் அதிகார யாத்திரை *CM வேட்பாளர்கள் நிதிஷ், தேஜஸ்வி என்றாலும், மோடி, ராகுலை முன்னிறுத்திய பிரசாரம் *3-வது சக்தியாக களமிறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர் ஏற்படுத்தப் போகும் தாக்கம்.
Similar News
News October 7, 2025
வலுவான கால்கள் பெற 4 பயிற்சிகள்

கால்கள் தொடர்ந்து செயல்படும்போது, உடலுக்கு சிறந்த ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றன. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன. எனவே, கால்களை வலுவாக வைத்துக்கொள்வது, நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். வலுவான கால்களுக்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று, மேலே போட்டோக்கள் உள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கால்கள் வலுவாக இருக்கா?
News October 7, 2025
OpenAI நிறுவனத்திற்கு CEO ஆகும் AI: சாம் ஆல்ட்மேன்

மனிதர்களின் தனித்திறன் என்பது அறிவாற்றல் அல்ல; பிறர் மீது அக்கறை கொள்ளும் திறன் என OpenAI CEO சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். மனிதர்களை விட AI அசாதாரண திறன் கொண்ட அதிபுத்திசாலியாக மாறும் எனவும், OpenAI நிறுவனத்திற்கு ஒரு AI, CEO-ஆக வரும் காலம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வருங்காலத்தில் மற்றவர்களுக்கு உதவுவது, கவனித்து கொள்வது சார்ந்த புதிய வேலைகள் உருவாகும் என்றும் கணித்துள்ளார்.
News October 7, 2025
அக்டோபர் 7: வரலாற்றில் இன்று

*1708 – குரு கோபிந்த் சிங் மறைந்த நாள். *1920 – தமிழ் கவிஞர் முடியரசன் பிறந்தநாள். *1952 – ரஷ்ய அதிபர் புடின் பிறந்தநாள். *1978 – வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பிறந்தநாள். *1979 – நடிகர் நரேன் பிறந்தநாள். *1981 – வீணை கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி பிறந்தநாள். *1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலிஸ்தான் விடுதலையை அறிவித்தனர். எந்நாடுகளும் இதை அங்கீகரிக்கவில்லை.