News October 7, 2025

ARATTAI-யில் இதை கவனிச்சீங்களா?

image

வாட்ஸ்ஆப்புக்கு மாற்றான இந்திய தயாரிப்பு என்று களமிறங்கிய ZOHO-வின் ‘அரட்டை’ செயலிக்கு உண்மையிலேயே செம வரவேற்பு கிடைத்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் உள்ளது போலவே இதிலும் வாய்ஸ் / வீடியோ கால், end-to-end என்கிரிப்ஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், பயனரின் மெசேஜ்களை ZOHO தன் சர்வரில் சேமித்து வைக்கிறது என Money Control செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது தனியுரிமை பாதுகாப்பை பாதிக்கக் கூடும்.

Similar News

News October 7, 2025

அக்டோபர் 7: வரலாற்றில் இன்று

image

*1708 – குரு கோபிந்த் சிங் மறைந்த நாள். *1920 – தமிழ் கவிஞர் முடியரசன் பிறந்தநாள். *1952 – ரஷ்ய அதிபர் புடின் பிறந்தநாள். *1978 – வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பிறந்தநாள். *1979 – நடிகர் நரேன் பிறந்தநாள். *1981 – வீணை கலைஞர் வைக்கம் விஜயலட்சுமி பிறந்தநாள். *1987 – சீக்கிய தேசியவாதிகள் இந்தியாவில் இருந்து காலிஸ்தான் விடுதலையை அறிவித்தனர். எந்நாடுகளும் இதை அங்கீகரிக்கவில்லை.

News October 7, 2025

வங்கியில் ₹93,960 சம்பளத்தில் வேலை.. அப்ளை பண்ணுங்க

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 56 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்த 24-39 வயதுக்குட்பட்டவர்கள் மேனேஜர், சீனியர் மேனேஜர், Forex Acquisition பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ₹93,960 முதல் ₹1,05,280 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

News October 7, 2025

Cinema Roundup: சிம்புவுக்கு ஜோடியாகும் சமந்தா

image

*STR49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. *ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் 4 நாள்களில் ₹335 கோடி வசூலித்துள்ளது. *கவினின் ‘மாஸ்க்’ படத்தில் இருந்து கண்ணுமுழி பாடல் வெளியாகியுள்ளது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ 11 நாள்களில் ₹308 கோடி வசூலித்துள்ளதாக தகவல்.

error: Content is protected !!