News October 7, 2025
மெசேஜ்களில் வாக்குவாதம் செய்கிறீர்களா?

எந்த ஒரு உறவிலும் சண்டை, முரண்கள் இருப்பது இயல்புதான். ஆனால், மெசேஜ்களில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அதிக ஆபத்தை தரும் என USA பல்கலை.,-யின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அது நேரில் ஈடுபடுவதை விட 3 மடங்கு அதிக தாக்கத்தையும், 4 மடங்கு அதிக எரிச்சலையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. எனவே சின்ன சண்டைகள் கூட உறவு விரிசலுக்கு வழிவகுக்கலாம். ஆதலால், எதுவாக இருப்பினும் நேரில் பேசுவதே ஆகச்சிறந்தது.
Similar News
News October 7, 2025
Cinema Roundup: சிம்புவுக்கு ஜோடியாகும் சமந்தா

*STR49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. *ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் 4 நாள்களில் ₹335 கோடி வசூலித்துள்ளது. *கவினின் ‘மாஸ்க்’ படத்தில் இருந்து கண்ணுமுழி பாடல் வெளியாகியுள்ளது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ 11 நாள்களில் ₹308 கோடி வசூலித்துள்ளதாக தகவல்.
News October 7, 2025
மிதாலி ராஜை கெளரவிக்கும் ஆந்திர அரசு

மகளிர் கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனை படைத்த மிதாலி ராஜை ஆந்திர அரசு கெளரவிக்க முடிவெடுத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு ஸ்டாண்டுக்கு மிதாலி ராஜ், உள்ளூர் வீராங்கனை ரவி கல்பனா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன. விசாகப்பட்டினத்தில் IND W Vs AUS W உலக கோப்பை போட்டி நடைபெறும் அக்.12-ம் தேதி அன்று, அவர்களது பெயர்களில் இரு ஸ்டாண்ட்களும் திறக்கப்படவுள்ளன.
News October 7, 2025
சே குவேரா பொன்மொழிகள்

▶புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. ▶சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும். ▶விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.