News October 6, 2025
பெட்ரோல்: எந்த நாட்டில் எவ்வளவு?

பெட்ரோல் விலையை கேட்டாலே பலரும் அலறுகின்றனர். ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு விலை என்று புலம்புகின்றனர். பிற நாடுகளில் எவ்வளவு விலை என்று தெரியுமா? அதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. 1 லிட்டர் பெட்ரோலின் விலை. இந்திய மதிப்பில் எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எங்கே விலை அதிகம்? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 7, 2025
சே குவேரா பொன்மொழிகள்

▶புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. ▶சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும். ▶விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.
News October 7, 2025
விஜய் ரசிகர்களுக்கு பொண்ணு கொடுக்காதீங்க: வீரலட்சுமி

கரூர் துயரத்திற்கு விஜய் ரசிகர்களே காரணம் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் துயரத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் தமிழக மக்கள் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்க மற்றும் வீட்டில் பெண் எடுக்க கூடாது, யாரும் அவர்களை காதலிக்காதீர்கள் என்றும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். விஜய்யை போல அவரது ரசிகர்களும் தவறான செயல்களிலேயே ஈடுபடக் கூடியவர்கள் என்று அவர் சாடியுள்ளார்.
News October 7, 2025
‘AK64’ ஷுட்டிங் விரைவில் தொடக்கம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK64 படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.