News October 6, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

‘கல்வெட்டு செம்மல்’ என அழைக்கப்படும் பிரபல தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன்(85) இன்று காலமானார். தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் காசிநாதன் தலைமையில்தான் முதல்முறையாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வு நடந்தது. தமிழக அரசின் உவேசா விருது உள்பட பல விருதுகளை பெற்ற அவருக்கு, CM ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News October 7, 2025
‘AK64’ ஷுட்டிங் விரைவில் தொடக்கம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK64 படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
News October 7, 2025
CJI மீதான தாக்குதல் முயற்சிக்கு CM ஸ்டாலின் கண்டனம்

CJI பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு CM ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எந்தளவு ஆழமாக நீடிக்கிறது என்பதை தாக்குதலுக்கான காரணம் வெளிப்படுத்துவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளை மதித்து பாதுகாக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 481 ▶குறள்: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. ▶பொருள்: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.