News April 15, 2024
மைதானத்தில் நடிகனாக மாறுகிறார் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா களத்தில் அதிகம் நடிப்பதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மும்பை அணி ரசிகர்களின் கோபம் பாண்டியாவை அதிகம் பாதித்துள்ளது. அதனால் தான் டாஸ் போடும் போது கூட அதிகம் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை போல் காட்டிக்கொள்கிறார். இந்த நிலையில் நானும் சில காலம் இருந்துள்ளேன். கிரிக்கெட்டில் சரியான முடிவுகளை எடுக்காத போது இத்தகைய சிக்கல் எழுவது சாதாரணமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 17, 2025
மறைந்த இல உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைதி பேரணி

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி பூங்கா அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வர மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.தொடர்ந்து இல கணேசன் திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
News August 17, 2025
அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.
News August 17, 2025
‘புஷ்பா’ படத்தை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ்?

இன்றைய சினிமாவில் சட்டவிரோத செயல்களை செய்யும் கேரக்டர்கள் தான் ஹீரோவாக உள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கெட்டது செய்யும் ஹீரோக்கள் வெல்ல வேண்டும் என இன்றைய ரசிகர்கள் விரும்புவதாகவும், இந்த மனநிலை பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் ஹீரோவை கொண்டாடிய ‘புஷ்பா’ படத்தைதான் அவர் சாடியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.