News October 6, 2025
இனி வெள்ளம், கனமழைக்கும் இன்சூரன்ஸ்.. உடனே பணம்!

வெள்ளம், கனமழை, வெப்ப அலை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும் இன்சூரன்ஸ் வழங்குவது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், இனி நமது உடமைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். இது வழக்கமான காப்பீடாக இல்லாமல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட உடனே பணம் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News October 7, 2025
CJI மீதான தாக்குதல் முயற்சிக்கு CM ஸ்டாலின் கண்டனம்

CJI பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு CM ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எந்தளவு ஆழமாக நீடிக்கிறது என்பதை தாக்குதலுக்கான காரணம் வெளிப்படுத்துவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளை மதித்து பாதுகாக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 481 ▶குறள்: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. ▶பொருள்: தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.
News October 7, 2025
கரூர் துயரத்தை திசைதிருப்ப திமுக முயற்சி: அண்ணாமலை

கரூர் துயரத்தில் திமுக அரசு மீது தவறும் இருந்தும் கமல்ஹாசன் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கமல்ஹாசன் பல நாள்களுக்கு முன்பே தனது ஆன்மாவை விற்றுவிட்டதாகவும், அதனால் அவரது பேச்சை மக்கள் பொருட்படுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் வழக்கை திசை திருப்பும் முயற்சியாக திமுக தினமும் ஒருவரை அங்கு அனுப்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.