News October 6, 2025

நன்மைகள் தரும் ஷரத் பெளர்ணமி… கும்பிடும் முறை

image

ஷரத் பெளர்ணமியான இன்று நிலவு வெளியிடும் கதிர்கள் நன்மைகள் தரும் என்பது நம்பிக்கை. இந்நாளில் இரவில் சந்திர தேவியை வணங்குவது சுபமாகும். முன்னோர் ஆசியை விரும்புபவர்கள், செல்வம் ஆரோக்கியம் அமைதி வேண்டுபவர்கள், புதிய விரதம் & உறுதிமொழி எடுக்கும் குடும்பத்தினர் இந்த வழிபாட்டை செய்யலாம். பசும்பால் கீர் (பால், அரிசி, சர்க்கரை சேர்த்தது) நிலவின் முன் படைத்து காலையில் பிரசாதமாக எடுப்பது நன்மைகள் தருமாம்.

Similar News

News October 7, 2025

CJI மீது செருப்பு வீச முயன்றவர் விடுவிப்பு

image

CJI பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் யாரும் புகார் அளிக்காத நிலையில், அவர்களின் சம்மதத்தை பெற்று ராகேஷை விடுவித்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக வழக்கறிஞர் ராகேஷிடம் டெல்லி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.

News October 7, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 7, புரட்டாசி 21 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

News October 7, 2025

TRB தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவையுங்கள்: அன்புமணி

image

அக்.12-ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் அத்தேர்வை எதிர்கொள்வதற்கு, கூடுதல் அவகாசம் தேவை என தேர்வர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கணினி முறையில் (CBT) தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!