News October 6, 2025
வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் வடகிழக்கு பருவமழையானது, தமிழகத்தின் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதம் வழக்கத்தை விட கூடுதலாக 15 சதவீதம் மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News October 7, 2025
சென்னை: தீபாவளியை முன்னிட்டு 14,208 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,372 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 16-19ஆம் தேதி வரை தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,208 சிறப்புப் பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து 6,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 3 நாட்கள் 10,529 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
News October 7, 2025
முதல்வர் தாயார் மருத்துவமனையில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
News October 7, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (06.10.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.