News October 6, 2025
ஒரே நாளில் ₹2,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

தங்கம் விலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று <<17930560>>சவரனுக்கு ₹1400<<>> அதிகரித்த நிலையில், பார் வெள்ளி கிலோ ₹2,000 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, ஒரு கிராம் வெள்ளி ₹167-க்கும் ஒரு கிலோ ₹1.67 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படியே போனா வெள்ளி வாங்குறது கஷ்டம்தான் போல..!
Similar News
News October 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 7, 2025
பாஜகவின் கணக்கு பலிக்குமா?

கூட்டணி ஆட்சி டிமாண்டுக்கு EPS முரண்டுபிடிப்பதால், விஜய்யை ஒரு ஆப்சனாக BJP வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். திமுகவை வீழ்த்துவது மட்டுமின்றி, TN-ல் கால்பதிப்பதிலும் குறியாக உள்ள அக்கட்சி, EPS ஒத்துவராவிட்டால், விஜய் தலைமையில் NDA-ஐ அமைக்கவும் தயங்காதாம். அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் (OPS, TTV) & அதிருப்தியாளர்கள்(KAS), பாமக, தேமுதிகவையும் உள்ளே கொண்டுவர வியூகம் வகுத்துள்ளது.
News October 7, 2025
சீன ஆயுதங்கள் சிறப்பாக வேலை செய்கின்றன: பாக்.

ஆபரேஷன் சிந்தூரின் போது சீன தயாரிப்பு ஆயுதங்கள் சிறப்பாக வேலை செய்ததாக பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி தெரிவித்துள்ளார். அனைத்து நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தயாராக இருப்பதாகவும், சீனாவின் நவீன ஆயுதங்கள் பல்வேறு வல்லமைகளை கொண்டுள்ளதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரின் போது, பாக்., பயன்படுத்திய சீன ஏவுகணைகளை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.