News October 6, 2025

ராமதாசை நலம் விசாரித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

image

சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அக்டோபர் 6 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். உடன் இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திமுகவினர் இருந்தனர்.

Similar News

News October 6, 2025

வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

image

அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் வடகிழக்கு பருவமழையானது, தமிழகத்தின் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதம் வழக்கத்தை விட கூடுதலாக 15 சதவீதம் மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

News October 6, 2025

கூட்டுறவுச் சங்க வேலைக்கு தேர்வு தேதி அறிவிப்பு

image

சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த ஆக.6-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 044-24614289 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News October 6, 2025

சென்னை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!