News April 15, 2024
தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் மோடி

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நீலகிரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஜனநாயகத்தை காக்க பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு நாடு, ஒரு தலைவர் என மோடி தவறாக வழிநடத்தப் பார்ப்பதாக கூறிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் சாடினார்.
Similar News
News August 17, 2025
திருச்சி: மருங்காபுரியில் லாட்டரி விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு போலிசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மருங்காபுரி நடுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (46) என்பவர் லாட்டரி விற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து ரொக்கம் ரூ.14000 மற்றும் லாட்டரி எண்கள் குறிக்கப்பட்ட ஒரு பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
News August 17, 2025
அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.
News August 17, 2025
‘புஷ்பா’ படத்தை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ்?

இன்றைய சினிமாவில் சட்டவிரோத செயல்களை செய்யும் கேரக்டர்கள் தான் ஹீரோவாக உள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கெட்டது செய்யும் ஹீரோக்கள் வெல்ல வேண்டும் என இன்றைய ரசிகர்கள் விரும்புவதாகவும், இந்த மனநிலை பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் ஹீரோவை கொண்டாடிய ‘புஷ்பா’ படத்தைதான் அவர் சாடியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.