News April 15, 2024

தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்

image

தங்கம் விலை குறையாது, தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தால் மேலும் விலை அதிகரிக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல சந்தை நிபுணர்களும், விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

Similar News

News November 14, 2025

பொய்த்துப் போன கருத்துக் கணிப்புகள்

image

பிஹார் தேர்தல் முடிவுகள் NDA கூட்டணிக்கு அதிக மகிழ்ச்சியையும், MGB கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. புதனன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் NDA கூட்டணி 130 முதல் 160 இடங்கள் வெல்லும் என்றே கணித்திருந்தன. ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி 200-க்கு மேற்பட்ட இடங்களை NDA வெல்லும் எனத் தெரிகிறது. கருத்துக் கணிப்புகள் தவற என்ன காரணம்? கமெண்ட்டில் சொல்லுங்க.

News November 14, 2025

‘இன்னும் கொஞ்சம் என’ ரீல்ஸ் பார்ப்பவரா நீங்க?

image

‘இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்’ என்ற யோசனையில் ரீல்ஸ் பாக்குறீங்களா? அது மிகவும் ஆபத்தானது என சீனாவின் தியான்ஜின் நார்மல் யுனிவர்சிட்டி எச்சரிக்கிறது. மது அருந்துவதை விட ரீல்ஸ் பார்ப்பது 5 மடங்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அதிக நேர ரீல்ஸ் பார்ப்பது மூளையின் செயல்திறனையும் நேரடியாக பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!

News November 14, 2025

வாக்குகளை பிரித்தாரா ஒவைஸி?

image

பிஹார் தேர்தலில் ஒவைஸியின் AIMIM கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியிலும் சேராமல், ஆளும் கூட்டணியுடனும் இணையாமல் போட்டியிடுவது இவரின் வழக்கமாக உள்ளது. முஸ்லிம்கள் மெஜாரிட்டி உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இவர், முஸ்லிம் வாக்குகளை பிரித்துவிட்டதும் பல தொகுதிகளில் MGB கூட்டணி தோல்விக்கு காரணம் எனப்படுகிறது.

error: Content is protected !!