News April 15, 2024
தோல்வியில் இருந்து பாடம் கற்குமா RCB

தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் RCB, இன்று SRH-ஐ எதிர்கொள்கிறது. SRH 250 ரன்கள் மேல் குவித்து, ஏற்கெனவே தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளது. ஆனால், RCB-யில் அப்படி இல்லை; கோலியை தவிர மற்ற வீரர்களின் ஆட்டம் மோசம்; குறிப்பாக பந்துவீச்சும் டெத் ஓவர்களில் சரியாக எடுபடவில்லை. இதையெல்லாம் சரி செய்தால் தான் இன்றைய போட்டியில் வெல்ல முடியும்.
Similar News
News November 7, 2025
Business 360°: கார் விற்பனையில் மாருதி சுசூகி சாதனை

*இந்தியாவில் 3 கோடி கார்களை விற்ற முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசூகி படைத்துள்ளது. *நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் ₹49,456 கோடி லாபம் ஈட்டியுள்ளன. *செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி 60.9 புள்ளிகளாக பதிவு. *கூகுள் மீது ஆப்பிள் நிறுவனம் ₹9 ஆயிரம் கோடி முதலீடு. *தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு.
News November 7, 2025
தொலைந்து போன போனை நீங்களே கண்டுபிடிக்கலாம்

மத்திய அரசின் ‘Sanchar Saathi’ இணையதளம் மூலம் தொலைந்துபோன உங்கள் போனை ட்ராக் செய்து கண்டுபிடிக்கலாம். இதில் வேறு யாரும் உங்கள் போனை பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தால்தான் Sanchar Saathi மூலம் போனை கண்டுபிடிக்க முடியும். <
News November 7, 2025
திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது: CM ஸ்டாலின்

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யவும் திமுகவினர் தயாராக உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருமண விழாவில் பேசிய அவர், திமுகவை ஒழிக்க யார் யாரோ வந்து சென்றதாகவும், ஆனால் எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார். SIR-க்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தாலும், அதன் பணிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் CM வலியுறுத்தினார்.


