News October 6, 2025
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகாதா?

விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகும் என நம்பிக்கொண்டிருந்த வேளையில், கரூர் அசம்பாவிதம் படக்குழுவை கதிகலங்க செய்துள்ளது. இதன் தாக்கம் இன்னும் 3 மாதங்களுக்காவது இருக்கும் என்பதால் பட ரிலீஸை பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிவைக்கலாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்களாம். படத்தை வாங்கிய OTT நிறுவனமும் இதற்கு OK சொல்ல, விஜய் பதிலுக்காக படக்குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News October 6, 2025
வங்கியில் 171 காலியிடங்கள்.. ₹64,820 வரை சம்பளம்!

இந்தியன் வங்கியில் 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 23- 36 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் எழுத்து தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு ₹64,820- ₹1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News October 6, 2025
தீபாவளி பரிசாக ₹2,000.. அரசு ஏற்பாடு

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகையை(₹2,000) தீபாவளிக்கு முன்பே வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாச்சல், உத்தராகண்ட் மாநில விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோர் KYC அப்டேட் செய்திருந்தால் தீபாவளிக்கு முன்பு பணம் வரவு வைக்கப்படுமாம். அதனால், KYC அப்டேட் செய்யாதவர்கள் <
News October 6, 2025
இந்திய பாரா தடகள வீரர்களுக்கு PM மோடி வாழ்த்து

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 6 தங்கத்துடன் 22 பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், PM மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வெற்றியாளர்களின் சாதனை மற்றவர்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் எனவும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார். போட்டியில் பங்கேற்ற கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.