News October 6, 2025

விலை புதிய உச்சம்.. ஒரே நாளில் ₹1000 உயர்வு..

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளியின் விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாளில் மட்டும் வெள்ளி விலை ₹5 ஆயிரம் அதிகரித்துள்ளது. விலை குறையும் என்று எதிர்பார்த்த நகை பிரியர்கள், விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News October 6, 2025

இரட்டை தலை பாம்பு பார்த்து இருக்கீங்களா?

image

இரட்டை தலை பாம்பு, இயற்கையில் மிகவும் அபூர்வமாகக் காணப்படுகிறது. மரபியல் கோளாறு காரணமாக, பிறக்கும்போது பாம்புகளுக்கு இரட்டை தலை இருக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவரை, புராணங்களில் மட்டும் கேள்விப்பட்ட இரட்டை தலை பாம்பின் போட்டோக்கள் SM-யில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. மேலே உள்ள போட்டோஸை பாருங்க. நீங்க நேரில் பார்த்ததுண்டா? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 6, 2025

இதற்காக தான் நோபல் பரிசு

image

2025ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேரி பிரங்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சககுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் பாதுகாப்பு அம்சங்கள், T-செல்கள் பற்றிய ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ இம்யூன் நோய், கேன்சர் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும், ஸ்டெம் செல் மாற்றத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் இவர்களின் ஆய்வு உதவும்.

News October 6, 2025

BREAKING: பள்ளி திறந்த முதல்நாளே முக்கிய அறிவிப்பு

image

<<17901745>>RTE<<>> சட்டத்தின்கீழ் பயன்பெற பள்ளி மாணவர்கள் இன்று(அக்.6) முதல் விண்ணப்பிக்கலாம் என TN அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய அறிவிப்பின்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்றும், பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. RTE நிதியை விடுவிக்க மத்திய அரசு தாமதம் செய்த நிலையில், பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!